பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

21 September 2020, 8:06 pm
Quick Share

கரூர்: கரூரில் ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ 3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நன்னியூரில் அண்ணாநகரில், ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், சோமூரில், 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் புதிய பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். இதுதவிர நன்னியூர், நெரூர்,

சோமூர் ஆகிய பகுதிகளில் ஊராட்சிகளில் 3175 தனிநபர் குடிநீர் இணைப்புகளுக்கு உண்டான பூமி பூஜை மற்றும் சாலை மேம்பாடு ஆகியவற்றுக்கான பூமிபூஜை ஆகியவற்றை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் மேலும் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்றார் அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் கவிதா மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்