நகரும் நியாயவிலைக்கடை வாகனத்தை துவக்கி வைத்த அமைச்சர் நீலோபர் கபீல்

26 September 2020, 7:22 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் நகரும் நியாயவிலைக்கடை வாகனத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் துவக்கி வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் நகரும் நியாயவிலைக்கடை வாகனத்தை முதல்வர் துவக்கி வைத்தார். அதன்படி,
இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 49 நகரும் நியாயவிலைக்கடை வாகனங்கள் பெறப்பட்டு முதலாவதாக வாணியம்பாடி அடுத்த அண்ணாநகர் பகுதியில், அரிசி, எண்ணெய், பருப்பு, சர்க்கரை,கோதுமை, மைதா,உப்பு,அடங்கிய நகரும் நியாயவிலைக்கடை வாகனத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் வாணியம்பாடி கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Views: - 8

0

0