அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு…

9 August 2020, 10:38 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்த கொரோனா நோயாளியை நேரில் சந்தித்து குறைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கேட்டறிந்து ஆய்வு செய்தார் .

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், இதனை சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமென வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் இது வைரலானது.

இந்நிலையில் கொரோனா நோயாளியின் குற்றச்சாட்டை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனையில் உள்ள கழிவறை சுத்தமாக உள்ளதாக என கொரோனா வார்டில் சென்று ஆய்வு செய்த அவர் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களில் கோட்டரிந்தார். தொடர்ந்து மருத்துவமனை குறித்து குற்றச்சாட்டு தெரிவித்த நோயாளியை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நோயாளி ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து கொரோனா வார்டிற்குள் வந்து ஆய்வு செய்த அமைச்சரை நோயாளிகள் வெகுவாக பாராட்டினர். இதனிடையே குற்றச்சாட்டு தெரிவித்த கொரோனா நோயாளி அமைச்சர் நேரடியாக வந்து ஆய்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

Views: - 11

0

0