பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் பொன்முடி: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

Author: Udhayakumar Raman
24 July 2021, 2:32 pm
Quick Share

விழுப்புரம்: திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டமருதூர், கொடுக்கப்பட்டு, சொரையப்பட்டு, கழுமரம், குலதீபமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் விழா நடைபெற்றது. விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், பொது மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 91

0

0