பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்கு வரும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…

3 September 2020, 2:34 pm
Quick Share

மதுரை: தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளை அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றினர்.

அமெரிக்கா சிலிக்கானை மையமாக கொண்டு 61 நாடுகளை உள்ளடக்கிய டைய் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் 27 வது டைய்கான் 2020 எனும் மாநாடு நடைபெற்றது. 22 நாடுகளை சேர்ந்த 4,500 முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நாட்டின் இடையே செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்ற ஆண்டு முதல்வர் தலைமையில் சுற்றுப்பயணம் செய்து கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும்,

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. காணொளி காட்சி வழியே நடைபெற்ற மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வீடியோ வடிவில் உரை நிகழ்த்தினார். மதுரையிலிருந்து தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், சென்னையிருந்து செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்த்திய உரையில், “தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளை அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் இணைய வசதி கொடுக்கப்படும்,

கிராமங்கள் தோறும் அதி வேக இணைய வசதி பெறுவதால் தகவல் தொழில்நுட்பத்துறையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும், தமிழக அரசு கிராமப்புற இளைஞர்களின் திறனை உலகளாவிய அளவில் எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப போட்டியை கிராமப்புறங்களில் இருந்து இளைஞர்கள் எதிர்கொள்ள பயிற்சிகள் கொடுக்கப்பட திட்டமிட்டுள்ளது” என பேசினார்.

Views: - 7

0

0