வடசென்னை அனல்மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

Author: Udhayakumar Raman
24 July 2021, 2:58 pm
Quick Share

திருவள்ளூர்: அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் நிலை இரண்டில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலை 2 தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தலா 600 இரண்டு அலகுகளில் மொத்தம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் இரண்டாவது நிலையில் மின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மின் உற்பத்தி நடைபெற்று நிலக்கரி சாம்பல் கழிவுகள் ஒரு டன் கணக்கில் தேங்கி உள்ளதை அகற்றப்படும் பணிகளையும், சாம்பல் கழிவுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், மின் உற்பத்தி நடைபெறும் பட்சத்தில் நாளொன்றுக்கு சுமார் 2 டன் சாம்பல் கழிவுகள்
மின்நிலையத்தில் கையாளப்படுவது குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Views: - 86

0

0