இலங்கை தமிழர் வசிக்கும் முகாமில் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

2 July 2021, 2:31 pm
Quick Share

வேலூர்: இலங்கை மக்கள் வசிக்கும் முகாம் பகுதிக்கு சென்று குறைகளை கேட்டறிந்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ். மஸ்தான் மனுக்களை பெற்றார்.

வேலூர் கோட்டத்திற்குட்பட்ட வணிகர்களுடனான ஆரோனை கூட்டம் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நல துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ். மஸ்தான், வேலூர் அடுத்த மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் வசிக்கும் முகாம் பகுதிக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் வீடு வீடாக சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் வசிப்பவருக்கு ரேசன் அட்டை வழங்க வேண்டும், குடிநீர்வசதி ஏற்படுத்தி தரவேண்டும், படித்தவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தினர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் மஸ்தான் விரைவில் கூடுதலாக நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், குடும்ப அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Views: - 345

0

0