பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர்…

8 August 2020, 10:09 pm
Quick Share

தருமபுரி: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டும் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் யு.சப்பாணிப்பட்டி, ராமாபுரம், கீழ்கொள்ளுப்பட்டி ஆகிய இடங்களில் ரூபாய் 44 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடமும், ரூபாய் 31 லட்சம் மதிப்பில் உணவு அருந்தும் கூடம் என ரூபாய் 75 லட்சம் மதிப்பில் கட்டப்படும் எனவும், மேலும் பெரியாம்பட்டி காமராஜர் நகரில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் கழிவுநீர்க்கால்வாய் கட்டும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. ஆக மொத்தம் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 பணிகள் ரூபாய் 6 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் முன்னதாக பெரியாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 40 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 3 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி கலந்து கொண்டார்.

Views: - 30

0

0