அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்

Author: Udhayakumar Raman
27 June 2021, 1:56 pm
Quick Share

திருச்சி: ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் உதவி பொருட்களை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், வெக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் இன்று நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நிவாரண நிதி ரூபாய் 4000 மற்றும் இதர உதவி பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை சுமார் 603 பயனாளிகள் இதனை பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து தில்லைநகர் 56வது வார்டில் திமுக வட்டச் செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் சுமார் 1000 பயனாளிகளுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை வரித் துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

Views: - 189

0

0