ஹாக்கி மகளிர் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சர்
Author: kavin kumar15 October 2021, 5:28 pm
திருச்சி: தேசிய ஹாக்கி போட்டியில் விளையாட உள்ள தமிழக மகளிர் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
வரும் அக்டோபர் 20ம் தேதி 11 வது தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலம் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 36 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் தமிழக ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளை சேர்ந்த 36 வீராங்கனைகளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் உபகரணங்களை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான்,தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகர், ஹாக்கி அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
0