கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

Author: kavin kumar
22 August 2021, 2:53 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் 511 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ 8,47,000 மதிப்புடைய விபத்து மரண இழப்பீடு ஒருவருக்கும், இயற்கை மரண இழப்பீடு 10 நபருக்கும் மற்றும் ஓய்வூதியம் 500 நபருக்கு என 511 நபருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 196

0

0