முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி. அருண்குமார்!!

26 August 2020, 11:12 am
Cbe MLA prg - edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான பி.ஆர்.ஜி. அருண்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், ஆளும் அ.தி.மு.க.வும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கட்சியின் வளர்ச்சிக்காகவும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவதற்காகவும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), சூலூர் ஆகிய தொகுதிகள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

கோவை மாநகர் மாவட்ட செயலாளரான அம்மன் கே.அர்ச்சுணன், கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான பி.ஆர்.ஜி. அருண்குமாருக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி) ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை, கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர்.ஜி. அருண்குமார் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனிருந்தார்.

Views: - 1

0

0