புதுச்சேரிக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும் பிரதமர் அறிவிக்கவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

26 February 2021, 8:39 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரிக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,
புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், திறந்து வைத்த வைத்த பிரதமர் மேடி
4ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டம் கொடுத்துள்ளோம் என பொய் சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ச்சி இல்லை என பிரதமர் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் கொரோனா காலத்தில் மாநில வளர்ச்சி 10% அடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலாம அரசில் நாட்டின் வளர்ச்சி (மைனஸ்) -7 % ஆகா உள்ளது என்றார்.

52 திட்டங்களை முடக்கி இருந்தார் கிரண்பேடி மீது புகார் அளித்தும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிகாரி நியமித்தது செல்லாது என மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என்றும் பிரதமர் மீது குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், உண்மையை தெரிந்துகொள்ளாமல் யாரோ சொல்வதை மேடையில் பிரதமர் பேசி உள்ளதாகவும், மக்களை திசை திருப்ப பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார் என்றார்.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த ஒரு புதிய திட்டத்தை கூட பிரதமர் அறிவிக்கவில்லை என்றும், ஆட்சியை கவிழ்ப்பு வேலையை பிரதமர் செய்துள்ளார் என்றார். பண பலம், மற்றும் அதிகார பலத்தால் ஆட்சிக்கு வரலாம் என்று பாஜக நினைக்கிறார்கள். ஆனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

நாராயணசாமியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளையில் இருந்து – 27ல் இருந்து மார்ச்.5 ந்தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும்,
விருப்ப மனு தாக்கல் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.5 ஆயிரமும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.2,500 என நிர்ணையிகப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Views: - 6

0

0