ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம்

Author: kavin kumar
26 August 2021, 2:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரை சுற்றியுள்ள 5 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் எனக்கூறி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருக்கோவிலூர் பேரூராட்சி முன்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் வீரட்டகரம், அரும்பாக்கம், கீழத்தாழனூர், மேலத்தாழனூர், கனகனந்தல் ஆகிய 5 க்கும் மேற்பட்ட கிராமங்களை புதியதாக உருவாக்கபட்ட திருக்கோவிலூர் நகராட்சியுடன் சேர்ப்பதால் தங்களால் இந்திரா காந்தி ஊரக வேலைப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்திம் மூலம் பணி செய்ய முடியாது எனவும் ,கிராம புற விவசாயீகளுக்கு கிடைக்க பெறும் அரசின் திட்டங்கள் கிடைக்க பெறாது எனவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தங்களுடைய வாழ்வாதரம் பாதிக்கபடுவதாகவும்கூறி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என 5 கிராம மக்கள் திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு பேரூராட்சி அலுவலகத்துக்குள் மனு அளிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மூன்று நபர்களை மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். பிறகு பேரூராட்சி நிர்வாகத்தின் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சிக்கு முன்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது

Views: - 139

0

0