தூத்துக்குடியில் 240க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்திவைப்பு: அரசு உரிய நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை

23 September 2020, 6:32 pm
Thoothukkuid Fisherman - Updatenews360
Quick Share

தூத்துக்குடி: கடலில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுதால் தூத்துக்குடியில் 240க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி தென்தமிழக கடற்கரை பகுதியையொட்டி உள்ள குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலை 3.3 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை உயர வாய்ப்பு உள்ளது. மேலும் கடல் நீரோட்டம் வினாடிக்கு 62 முதல் 88 சென்டி மீட்டர் வரை உயர வாய்ப்பு உள்ளது. எனவே கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும்.

ஆகையால் மன்னார் வளைகுடா பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடியில் மீன்வளத்துறை அறிவித்தை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலுக்கு சென்று வரும் 240க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீனவர் சங்குபிச்சை கூறுகையில், பலத்த காற்று வீசும் என மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து நாங்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை நிறுத்தி வைத்துள்ளோம் இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வது ஆழ்கடல் பகுதிக்கு அல்ல நாங்கள் காலை 5 மணிக்கு தொழிலுக்கு சென்று இரவு 9 மணிக்கு திரும்பி விடுவதாக குறிப்பிட்ட அவர்,

தற்பொழுது மீன்வளத் துறையின் இந்த அறிவிப்பால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது என்றார். புயல் கால நிவாரணத்தொகை எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டிய அவர், கடந்த 10 தினங்களுக்கு முன்பு மீன்வளத்துறை ஜெயக்குமார் மீனவர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக ரூபாய் 1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தார் ஆனால் இதுவரை மீனவர்களின் வங்கிக் கணக்குகளில் அந்த பணம் வரவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் 25 ஆண்டுகாலமாக ஆளப்படுத்தப்படாமல் உள்ளது, கரைகள் விரிவாக்கம் செய்யப்பட வில்லை இதனால் விசைப் படகுகள் உடைந்து அடிக்கடி பழுது ஏற்படும் சூழல் உள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தி கரையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். மீன்பிடி நிவாரண தொகை அந்தந்த காலங்களில் உடனடியாக வழங்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 11 ஆயிரம் பேரை இரண்டாக பிரித்து மீனவர்களுககு கடைக்க வேண்டிய சலுகை வரைவாக கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டம் என் பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்க படவில்லை என்றார்.