கல்யாணராமனை கண்டித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மறியல்

8 February 2021, 5:06 pm
Quick Share

சேலம்: இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி பேசிய கல்யாணராமனை கண்டித்து சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அண்மையில் நடந்த பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்கள் குறித்தும், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தமிழகத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இஸ்லாமியர்களின் மறியல் போராட்டத்தினால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Views: - 0

0

0