ஐயா இங்கிருந்த குளம் காணவில்லை… கிண்டலடிக்கும் பொதுமக்கள்…

11 August 2020, 10:52 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஐயா இங்கிருந்த குளம் காணவில்லை என சினிமாவில் வரும் நகைச்சுவை போன்று காஞ்சிபுரம் பகுதியில் பொய்யாகுளம் பகுதியில் குளத்தை கடந்து செல்பவர்கள் கிண்டலடித்து செல்கின்றனர்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு பகுதியில் பல்லாண்டு காலமாக நகரின் மத்தியில் நீ வற்றாத குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தினால் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நிலத்தடி நீர் அதிகமாக காணப்பட்டு நீர் ஆதாரம் வலுவாக இருந்தது . சில ஆண்டுகளாக அந்தக் குளத்தை காஞ்சிபுரம் பெரு நகராட்சி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. சுத்தப்படுத்தாமல் விட்டதால் அந்த பகுதியில் உள்ள குப்பை கூளங்கள் அனைத்தும் குளத்தில் அடைந்து நீர் சேமிக்கக் கூடிய அளவுக்கு அடித்தளம் பலமிழந்து ஆகிவிட்டது.

கடந்த ஆண்டில் நன்றாக மழை பெய்தும் கூட நகரில் உள்ள பல குளங்களில் தண்ணீர் வெளியேறி குளம் வறட்சித் தன்மையோடு காணப்படுகின்றது. இந்தக் குளத்தில் நீர் நிறைந்து இருக்கும் போது காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு அதில் இந்த குளம் மிகவும் ஆழமானது. எனவே யாரும் இதில் குளிக்க வேண்டாம் என எச்சரித்திருந்தனர். தற்போது அந்த குளம் சீர்படுத்தப்படாத காரணத்தினால் குளத்தில் கருவேல மரங்களும் , குப்பைகளும், விஷ ஜந்துக்களும் அதிகமாக காணப்படுகின்றது. காஞ்சிபுரம் பெருநகராட்சி வைத்த எச்சரிக்கை பலகை மட்டும் நன்றாக உள்ளது .

அந்தப் பகுதியை கடந்து செல்லும் இளைஞர்கள் இந்த பலகையையும் குளத்தையும் பார்த்துவிட்டு சினிமாவில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை போல ஐயா இங்கே இருந்த குளத்தை காணோம் என கிண்டல் அடித்துக் கொண்டே செல்கின்றன. காஞ்சிபுரம் பெருநகராட்சி உடனடியாக இது போன்ற குளங்களைக் கண்டறிந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கருவேல மரங்களை அகற்றி சீர் படுத்தி வைத்தால் காஞ்சிபுரம் நகரில் நீர் ஆதாரம பெருகும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Views: - 27

0

0