வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு

Author: kavin kumar
23 August 2021, 4:58 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் மணலேரி பஞ்சாயத்திற்குட்பட்ட கயர்லாபாத் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 30 ஆண்டுகளாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தனர். மேலும் தங்களது ஊராட்சியில் நீர்நிலைகள் உள்ளிட்ட ஆக்ரமிப்பில் உள்ள இடங்களை மீட்டு வீடில்லாத தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மனு வாங்காத காரணத்தால் மனு பெட்டியை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலுக்கு கொண்டு வந்த போலீசார் அதில் மனுக்களை போட்டு செல்லுமாறு பொதுமக்களை கேட்டு கொண்டனர்.

Views: - 203

0

0