வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தாய் மற்றும் மகன் கைது:15 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சா பறிமுதல்

Author: kavin kumar
27 August 2021, 3:56 pm
Quick Share

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த15 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சந்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் காவல்துறையினர் சந்தமாநாயக்கன்பட்டி சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடத்தினர். இதில் அப்பகுதியில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 15 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த செந்தில் மனைவி ரேவதி மற்றும் அவரது மகன் வைரம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 297

0

0