பாலாற்று வெள்ளத்தில் சிக்கி தாய் மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழப்பு

30 November 2020, 8:26 pm
Quick Share

வேலூர்: பாலாற்று வெள்ளத்தில் சிக்கி தாய் மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் முழுவதும் நிவர் புயலின் தாக்கத்தினால் பலத்த மழை பொழிவு ஏற்பட்டு அனைத்து காட்டாறுகளில் இருந்து வெள்ளமானது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி 10,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த வெள்ள நீர் கவுண்டன்ய ஆற்றின் வழியாக பாலாற்றில் கலக்கிறது கவுண்டன்ய ஆற்றல்வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் ஆற்றலுக்கு வேடிக்கை பார்க்கவோ குளிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் குடியாத்தம் அருகே போடி பேட்டை என்ற பகுதிக்கு பின்னால் செல்லக்கூடிய கவுண்டன்ய ஆற்றில் யுவராஜ் என்ற மல்லிகை கடை ஊழியர் குழந்தைகளான அஸ்வினி (7), நிவேதா (12) ஆகியோர் ஆற்றில் குளிக்கச் சென்று தவறி விழுந்துள்ளனர். இதனை கண்ட தாய் நித்யா குழந்தைகளை காப்பாற்ற தானும் ஆற்றில் குதித்திருக்கிறார். நீரோட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து சடலங்களைத் தேடும் பணி கடந்த ஒரு மணி நேரமாக நடைபெற்றது.

தற்போது மூன்று பேரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இறங்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்ட இருக்கக் கூடிய நிலையில், பொது மக்கள் அலட்சியமாக குழந்தைகளோடு ஆற்றில் விளையாடுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Views: - 15

0

0