தொட்டிலின் கயிறு இறுக்கி 6 வயது குழந்தை உயிரிழப்பு..!

19 January 2021, 5:36 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் 6 வயது குழந்தை தொட்டில் கயிறு கழுத்து பகுதியில் இறுக்கியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் வசித்து வருபவர் இளவரசன் பாமா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளவரசன் கூலி வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி பாமா அருகிலிருந்த கடைக்குச் சென்று உள்ளார். அப்போது இரண்டாவது மகளான அபர்ணா (6) வீட்டில் தனியாக விளையாடி கொண்டு இருந்துள்ளார். எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதில் அபர்ணா உயிரிழந்துள்ளார். கடைக்குச் சென்றுவிட்டு திரும்பிய பாமா இதை கண்டு அலறி காவல்துறைக்கும் கணவருக்கும் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0