அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம்

Author: kavin kumar
6 October 2021, 5:27 pm
Quick Share

புதுச்சேரி: அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு  இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் சென்றவர்களை புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை செயலர் அருண் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைமாமணி பழனியாபிள்ளை மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நாகர்கோவிலில் இருந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்கான இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டனர். கடந்த மாதம் 15ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து தங்களது விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி பயணத்தை தொடங்கிய இவர்கள் சென்னை வழியாக புதுச்சேரியை வந்தடைந்தனர். இவர்களுக்கு புதுச்சேரி சுகாதார செயலர் அருண் மற்றும் திருநங்கைகள் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து மீண்டும் கன்னியாகுமரிக்கு தங்களது இருசக்கர விழிப்புணர்வு வாகன பயணத்தை தொடங்கினர். இந்த விழிப்புணர்வு வாகன பயணத்தை புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை செயலாளர் அருண் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவர்களுடன் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்

Views: - 229

0

0