நீர்தேக்கத்தை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகளை கொட்டிய மலைத்தேனீ

Author: Udhayakumar Raman
17 October 2021, 9:23 pm
Quick Share

திருவள்ளூர் அருகே பூண்டிசத்தியமூர்த்தி நீர்தேக்கத்தை சுற்றிப்பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் மீது மலைத்தேனீ கொட்டியதில் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று நீர்த்தேக்கத்தை சுற்றி பார்க்கச் சென்ற 20க்கும் மேற்பட்டோரை மலைத்தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நீர்தேக்கபகுதியில் மலை தேனி பல நாட்களாக இருக்கும் நிலையில் அதனைஅகற்றாமல்பொதுப்பணித்துறையினர் பொதுமக்களை அனுமதித்து வந்த நிலையில் தற்போது தேனீக்கள்கொட்டியதில் 20க்கும் மேற்பட்டவர்கள் மறுத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், எனவே தேனீக்களை அப்பகுதியில் இருந்து அகற்றபொதுபணிதுறையினர் தீயணைப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 70

0

0