நகராட்சி ஊழியர்கள் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

3 August 2020, 5:19 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு மாதம் ஊதியம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பிலும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஊர் முழுவதும் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் நோய்த் தொற்று உள்ள பகுதிகளில் சுத்தம் செய்தல், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திய பொருட்களை அப்புறப்படுத்துவது, நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த 2 மாதங்களாக இப்பணிகளில் பணிபுரியும் நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் புதுச்சேரி நகராட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
இதில் 100க்கும் மேற்ப்பட்ட நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டு சம்பளம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Views: - 8

0

0