சொத்து தகராறில் கணவன் மனைவி வெட்டிக்கொலை… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது…

2 August 2020, 2:37 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே சொத்து தகராறில் கணவன் மனைவி வெட்டிக்கொலை வழக்கில் தொடர்புடைய 3 சகோதரர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீஸ் சரகம் மனவாடி அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி தீபிகா சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக வெள்ளியனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சொத்து தகராறில் கணவன் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டதும், இதில் அவர்களை கொலை செய்த ரங்கநாதனின் உறவினர்கள் ராயனூரைச் சேர்ந்த தேவராஜ் மகன்கள் பார்த்திபன், கௌதமன், பிரவீன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் இந்த மூன்று இளைஞர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். சொத்து தகராறில் கணவன் மனைவி வெட்டிக் கொல்லப்பட்டார் மேலும் அவரது உறவினர்கள் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டப்படி கைது செய்திருப்பது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0