திருச்சியில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை: செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்

7 November 2020, 11:52 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஒடியவர்களை காவல்துறையின் தேடி வருகின்றனர்.

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி– செல்வி தம்பதியினர் இவர்களது மகன் விஜய்(18 ) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வந்துள்ளார். இன்று விஜய் நண்பர்கள் சிலருடன் தென்னூர் வாமடம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் விஜயை சரமரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், அப்பகுதியில் யார் பெரிய ரவுடி என்பதில்
விஜய்க்கும் அங்கிருந்த சில நபருக்கும் நேற்று பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தில்லைநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் அனைவரும் ஓடிவிட்டனர். இந்நிலையில் தான் இன்று விஜய் வீட்டில் இருப்பதைத் தெரிந்த எதிர் தரப்பினர் அங்கு வந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பி ஒடியவர்களை தேடி வருகின்றனர். கொலைச் சம்பவம் தொடர்பாக போட்டோ மற்றும் வீடியோ எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்களைஅங்கிருந்த இளைஞர்கள் கல்லால் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 32

0

0