யாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும்: கே.என்.நேரு பேச்சு

25 January 2021, 5:45 pm
Quick Share

திருச்சி: முருகன் எங்களுக்கும் பாஸ்போர்ட் கொடுத்துள்ளதாகவும், யாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும் என திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம், உள்ளிட்ட 5 பேர் தங்களது உயிரை தமிழுக்காக தியாகம் செய்தனர். இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் சாஸ்திரி ரோடிலிருந்து அண்ணாநகர் வழியாக உழவர் சந்தையில் உள்ள தியாகிகளின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதற்கு பின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,

கிராம சபை கூட்டம் நடத்தினால் மக்கள் தங்களுடைய குறைகளை சொல்லி கேள்வி எழுப்புவார்கள் என்ற அச்சத்தில் தான் அதிமுக கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது. முதல்வர் ஒரு முதல்வரை போல பேசுவதில்லை, திமுகவினரை தெருவில் வந்து பாரு என ஒருமையில் பேசி வருகிறார். முருகன் அருள் தர மாட்டார் என்ற முதலமைச்சரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, அவருக்கு மட்டும் ஸ்பெஷல் பாஸ்போர்ட் கொடுத்துள்ளாரா? அதே முருகன் எங்களுக்கும் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார்.

யாருக்கு அருள் தர வேண்டும் தரக்கூடாது என்பது முருகனுக்கு தெரியும்.இவர்கள் வேலை தூக்கி எறிவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு அருள் தருவார் நாங்கள் ஜெயிப்பது உறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பம் குறித்த கேள்விக்கு பேரறிஞர் அண்ணா படமே வாக்காளர் பட்டியலில் வந்திருக்கிறது. இது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

Views: - 5

0

0