நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

15 September 2020, 4:08 pm
Quick Share

திருச்சி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய முஸ்லிம் லீக் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநில தலைவர் காஜாமைதீன், மாநில பொதுச்செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ஜனுல்லா மகது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப், திருச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியர் ப பணியை ராஜினாமா செய்த சபரிமாலா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Views: - 6

0

0