மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

15 January 2021, 7:27 pm
Quick Share

மயிலாடுதுறை: பொறையாரில் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் வீரப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் மாதவன் (45 ). இவர் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். மாதவனுக்கும் அவரது மனைவி சித்ரா என்பவருக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வாடிக்கை. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனிடம் கோபித்துக்கொண்டுநாகூர் அருகே தென் கரையில் உள்ள தாய் வீட்டுக்கு சித்ரா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

கணவன் மாதவன் பொங்கலுக்கு தனது மனைவி சித்ராவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மனைவி வராததால் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொறையார் போலீசார் உடலை கைப்பற்றி பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது போக்குவரத்து கழக ஊழியர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0