மகனுக்கு பதில் தந்தையை கொலை செய்த மர்மகும்பல்: 6 பேரை கைது செய்து விசாரணை

Author: Udhayakumar Raman
10 September 2021, 2:56 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் நடந்த தகராறில் மகனை கொல்ல வந்த போது மகன் இல்லாததால் ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி துராபள்ளம் கிராமத்தை சேர்ந்த எழில் என்பவருக்கும் தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேருக்கும் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திருமணமண்டபத்திலிருந்து புறப்பட்ட எழில் தனது உறவினரான ஜீவானந்தம் என்பவரின் உதவியுடன் மேற்கண்ட 6 பேரையும் வழிமறித்து தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜீவாநந்தம் மீது ஆத்திரமடைந்த ஆறு பேரும்அவரை கொலை செய்ய வீட்டிற்கு சென்றபோது வீட்டு வாசலில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ஜீவாநந்தத்தின் தந்தை மோகனிடம் அவரை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கத்தியால் சரமாரியாக அவரைக் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கவலைக்கிடமான நிலையில் மோகன், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஜீவனாந்தம், அண்ணாமலை, கோபி, பிரேம் குமார், விஜயராஜ் ஆகிய 6 பேரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டு உயிரிழந்த மோகன் தள்ளுவண்டியில் உணவு விற்பனை கடத்தி வந்தவர் என்பதும், திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தகராறில் மகனை கொள்வதற்கு வந்தவர்கள் ஆத்திரத்தில் அவரின் தந்தையை கொலை செய்து தற்போது ஆறு பேர் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 130

0

0