சிறுவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

2 July 2021, 6:04 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் பட்டப்பகலில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் சிறுமியை ஏமாற்றி மிரட்டி நூதனமான முறையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் போந்தவாக்கம் கண்டிகை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் கட்டிட வேலை செய்து வருகிறார். அவரது மனைவி அங்கம்மாள் இவர்களது மகன் ஜானகிராமன், மகள் பிரியா வீடடில் தனியாக இருந்தபோது தாய் தந்தையர் இருவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில், இருசசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்த ஜானகிராமன், பிரியா இருவரை ஏமாற்றி உங்களது தந்தை பீரோவில் இருந்து பணம் மற்றும் நகைகளை வாங்கி வரச் சொன்னார் என கூறி பீரோ சாவியை வாங்கி இருவரையும் மிரட்டி கொன்று விடுவேன் என கூறி பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது பல்சர் இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள குணசேகர் என்பவரது மனைவி கர்ப்பிணிப் பெண் அனுசியா மற்றும் மணி என்பவரது மகள் கௌசல்யா ஆகியோரது வீட்டிற்கும் சென்ற மர்ம நபர்கள் தங்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என கேட்டு விட்டு பின்னர் லட்சுமணன் வீட்டிற்கு வந்து்கைவரிசை காட்டி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூன்று பேரும் கட்டிடம் கட்டும் கூலி வேலை செய்துவருகின்றனர். திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் குடியிருப்புகள் நிறைந்த கிராமத்தில் வீட்டில் நுழைந்து ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு திருடர்களை கண்டறிய போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 109

0

0