தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை அடித்து நொறுக்கும் மர்ம கும்பல்

28 January 2021, 7:26 pm
Quick Share

மதுரை: மதுரை சர்வேயர் காலனி அருகே தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை அடித்து நொறுக்கும் மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சர்வேயர் காலனி அருகே உள்ளது தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை. இம்மருத்துவமனை கடந்த 10 வருடங்களாக இயங்கி வருகிறது, மருத்துவர் கணேசன் என்பவர் இந்த மருத்துவமனையை நடத்தி வைக்கிறார். இந் நிலையில் நேற்று இரவு 5க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனை காம்பவுண்ட் சுவரை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த காட்சி அந்த மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த சிசிடிவி காட்சியை புதூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் புதூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சியை வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மர்ம கும்பலை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0