காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர் : 15 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை

Author: kavin kumar
2 February 2022, 1:44 pm
Quick Share

வேலூர் : வேலூர் அருகே பெண் காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி,பொன்னை அருகேயுள்ள பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜனீஷ் குமார். இவர் ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் மனைவி கனகா ஆர்.கே பேட்டை காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு மாதங்கள் தான் ஆகிறது. கணவன்-மனைவி இருவருமே வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

இந்த நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் தங்கநகைகள் ரூ.1. 25 லட்சம் ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பொன்னை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சமாகும். காவலரின் வீட்டிலேயே திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 722

0

0