தந்தை, மகனை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

27 February 2021, 6:18 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தந்தை, மகனை சரமாரியாக வெட்டிய மர்ம நபரை சிப்காட் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜூஜூவாடியில் பெங்களூரை சேர்ந்த தந்தை மணி(50), மகன் விக்னேஷ்(26) ஆகியோர் தங்கியிருந்து லாரி உள்ளிட்டவைகளுக்கு பெயிண்ட் பூசும் வேலை செய்து வரும்நிலையில், நேற்றிரவு தந்தை,மகன் தங்கியிருந்த பகுதிக்கு நுழைந்த மர்ம நபர் அரிவாளால் இருவரையும் வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் மயங்கி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் இன்று காலை மீட்டு இருவரையும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 15

0

0