அடுத்தடுத்து 8 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை: 24 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை

Author: Udayaraman
3 August 2021, 7:56 pm
Quick Share

திருவள்ளூர்: அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் அடுத்தடுத்து 8 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் வடசென்னை அனல் மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. நேற்று பணிக்கு மற்றும் வெளியூர் சென்றிருந்த ஊழியர்களின் வீடுகளை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப உதவி பொறியாளராக பணியாற்றும் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 11 சவரன் நகை, ரமேஷ் என்ற ஓவியரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 8 சவரன் நகை,

வெள்ளி பொருட்கள் மற்றும் சந்திரமோகன் என்பவரது வீட்டில் ஐந்து சவரன் தங்க நகை வெள்ளிப் பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அருகில் இருந்த குடியிருப்பில் மேலும் 5 வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. 10லட்ச ரூபாய் மதிப்பிலான நகை பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போன சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 87

0

0