பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: வட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

17 July 2021, 6:31 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரி அருகே தனியார் சிப்காட் தொழிற் பேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் புகை மண்டலம் ஆகி சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான இடத்தை வட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஏலியம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மகேந்திரா சிட்டி என்ற தனியார் தொழிற் பேட்டைஉள்ளது. இங்கு கொரியா, சீனா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தனியார் தொழிற் பேட்டை ஒட்டி அமைந்த ஏரிக்கரையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தனியார் தொழிற்சாலைகளின் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்ததால் அதில் தீ மளமளவென பற்றி மகேந்திரா சிட்டி

அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளான ஏலியம்பேடு, திருப்பேடு, கவரப்பேட்டை, பெரியகவனம், சின்னகாவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு கையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் திடீரென பெய்த கனமழையால் தீ முழுவதுமாக அணைந்தது அப்பகுதி பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பிளாஸ்டிக் குப்பைகழிவுகளை கொட்டி யார் தீ வைத்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

Views: - 37

0

0