மர்ம வெடி வெடித்து இளைஞர் படுகாயம்: போலீசார் விசாரணை…!!

Author: Udhayakumar Raman
8 September 2021, 6:54 pm
Quick Share

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே மர்ம வெடி வெடித்து இளைஞர் படுகாயம அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டாச்சிபுரம் கூட்டுச் சாலை அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி எதிரே உள்ள வனப் பகுதிக்கு, இன்று மதியம் கடகால் கிராமத்தை சேர்ந்த ராகுல் டிராவிட் என்கிற இளைஞர் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு கிடந்த மர்ம பொருள் ஒன்றை ராகுல் டிராவிட் தனது காலால் மித்துள்ளார். இதில் பயங்கர சத்தத்துடன் அந்த மர்ம பொருள் வெடிக்கவே அந்த இளைஞரின் வலது பக்க கால் படுகாயம் அடைந்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியோடு திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அரகண்டநல்லூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 124

0

0