வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை

Author: kavin kumar
7 November 2021, 1:56 pm
Quick Share

சென்னை: செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தங்க கரையம்பட்டு விவேகானந்தர் தெரு சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான்.இவர் செங்குன்றம் பகுதியில் நகை கடையில் நகைகளுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இவரின் குடும்பத்தினர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த முஜிபுர் ரகுமான் செங்குன்றத்தில் உள்ள உள்ள திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 சவரன் நகை 25 ஆயிரம் பணம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 213

0

0