உணவகத்தின் முதல் தளத்தில் திடீர் தீ விபத்து
25 August 2020, 9:32 pmகன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உணவகத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று தனியார் உணவகத்தின் முதல் தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எப்போதும் பரபரப்பாக வாகன் நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் தீ அணைப்பு படை வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஏசியில் இருந்து தீ பரவி உணவகம் பிடித்து எரிந்ததாக தெரிகிறது. மின் வாரியத்தினர் அடிகடி செய்து வரும் மின் வெட்டே காரணம் என கூறபடுகிறது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.