காமராஜர் சிலை அமைக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

24 August 2020, 10:29 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த இலந்தையடித்தட்டு பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் காமராஜர் சிலை அமைக்க முயன்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இலந்தையடித்தட்டு பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான காமராஜருக்கு ஆளுயர கற்சிலையை இன்று நிறுவ அப்பகுதியில் உள்ள மக்கள் சிலர் ஏற்பாடுகள் செய்தனர். இதை அறிந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் சிலையை நிறுவ சம்பந்தப்பட்ட நபர் அரசிடம் அனுமதி பெறவில்லை எனக்கூறி சிலை வைப்பதை தடுத்து நிறுத்தினார்.

இதனால் அங்கு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காமராஜர் சிலையை நிறுவ வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த ராஜாக்கமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பதட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் போலிஸ் குவிக்கபட்டது. சிலை அமைக்க அரசு உத்தரவு தராவிட்டால் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி போராட்டங்களில் ஈடுபடுவோம் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் அரசுக்கு எச்சரிக்கை விடுவித்து உள்ளார்.

Views: - 33

0

0