பெயர் சேர்த்தல், நீக்க முகாமினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
22 November 2020, 7:34 pmஅரியலூர்: அரியலூர் அரசு மேல்நிலைபள்ளியில் நடைப்பெற்ற பெயர் சேர்த்தல், நீக்க முகாமினை அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16 ஆம் தேதி வெளியிடபட்டது. இதனையொட்டி வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வதற்கான முகாம் இன்றும், நாளையும் அடுத்த மாதம் 12, 13 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கபட்டு இருந்தது.
இதனையொட்டி அரியலூர் அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளரிடம் உரிய ஆவணங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் கூறினார். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்த சிறப்பு முகாமிலும், தாலூகா அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
0
0