பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

3 February 2021, 2:05 pm
Quick Share

புதுச்சேரி: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு அரசு சார்பில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Views: - 15

0

0