நீட் தேர்வு மரணங்கள் தற்கொலை அல்ல கொலை:முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி…

12 September 2020, 9:46 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: மாணவர்கள் விரோத போக்கில் ஈடுபடும் பாஜகவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தொடர்ந்து நடைபெறும் நீட் மரணங்களுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் எனவும், மாணவர்களின் நலனை மத்திய அரசும், பிரதமரும் பாதுகாக்க வேண்டும் என்றும், நீட் விவகாரத்தால் ஏற்படும் பிரச்சினைக்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என கூறினார். மேலும் நீட் மரணங்கள் தற்கொலை அல்ல கொலை எனவும், இது போன்ற மாணவர் விரோதப்போக்கில் ஈடுபடும் பாஜகவிற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்கள் தக்க பதில்இடி கொடுப்பார்கள் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.

மேலும் புதுச்சேரியில் முககவசம் அணிந்து செல்பவர்களுக்கும் சில போலிசார் அபராதம் விதித்து செயல்படுவதாக குற்றச்சாட்டிய அவர், எனவே காவல் துறையினர் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவ சோதனை மையங்களை 15 லிருந்து 25 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான மருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைக்கவும் உரியநடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த அவர், தனியார் மருத்துவமனைகளில் பொது சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் தகவலை அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 7

0

0