தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க நாராயணசாமி வலியுறுத்தல்

23 January 2021, 7:28 pm
Quick Share

புதுச்சேரி: இலங்கை அரசிடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி சாட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “அண்டை மாநிலங்களில் மருத்துவப்படிப்பில் உள்ளூர் மாணவர்களுக்கு 50 சதவித இடஒதுக்கீடு வழங்கி வருகின்றது. இதேபோல் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளூர் மாணவர்களுக்கு 50% இட ஒதுகீடும், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு அனுமதிக்க வில்லை என குற்றம்சாட்டிய அவர்,

இட ஒதுக்கீடு விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மீனவர்கள் 4பேர் சுட்டுக்கொள்ளப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பெட்ரோல் விலை தற்போது விஷம் போல் உயர்ந்து வருகிறது. இது போன்ற விலை உயர்வை இதுவரை பார்த்தது இல்லை என தெரிவித்த அவர்,

விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், கச்சா என்னை விலை குறைவாக உள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிதரமர் விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்த்து 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Views: - 0

0

0