பெட்ரோல், டீசல் விலையை திரும்பப்பெற கோரி மாட்டு வண்டியின் மீது அமர்ந்து பயணம் செய்த நாராயணசாமி
6 February 2021, 5:10 pmஉயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்பப்பெற கோரி புதுச்சேரியில் மாட்டு வண்டியின் மீது அமர்ந்து பயணம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மற்றுல் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற கோரி புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷா பேரணி நடத்தப்பட்டது. சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து மாட்டு வண்டியின் மீது அமர்ந்து சுமார் 500மீட்டர் தூரம் அதில் பயணம் செய்து மத்திய அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், காமராஜர் சதுக்கம் வழியாக வந்த பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷாவில் அமைச்சர் கந்தசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் சுப்ரமணியன், இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர்கள் விக்னேஷ், வேல்முருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
0
0