கொரோனா கட்டுப்படுத்துவது தொடர்பாக நாராயணசாமி ஆலோசனை

13 August 2020, 10:55 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதனுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க செவ்வாய்கிழமை தோறும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி வந்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி, டாக்டர். சவுமியா சுவாமிநாதனுடன் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சட்டமன்ற கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை செயலரும் மாவட்ட ஆட்சியருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் குழுவினர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்த டாக்டர்.சவுமியா சுவாமிநாதன் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Views: - 8

0

0