நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுக்கையிட்ட நரிக்குறவர்கள்

23 November 2020, 3:34 pm
Quick Share

கன்னியாகுமரி :குமரிமாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் ஊசிப்பாசிகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் நரிக்குறவர்கள் இன்று தங்களின் உடமைகளை நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து சென்று விட்டதாக கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் 100 -க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் ஊசி பாசிகளை விற்பனை செய்து வருகின்றனர்.இவர்கள் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு பேருந்து நிலையத்திற்க்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அவ்வப்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனால் நரிக்குறவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு நகராட்சி ஊழியர்கள் அறிவுறித்தினர்.

பலமுறை கூறியும் நரிக்குறவர்கள் இடத்தை மாற்றாமல் அங்கேயே இருந்ததால் நேற்றிரவு மாநகராட்சி ஊழியர்கள் நரிக்குறவர்களின் உடமைகளை மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் இன்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்களது உடைமைகளை திருப்பி தருமாறு கேட்டு அலுவலகத்தை முற்றுயிட்டனர்.இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Views: - 13

0

0