பார்வையிட வராத தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு: வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

24 January 2021, 6:14 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட வராமால் காக்க வைத்தாக கூறி விவசாயிகளை வேளாண்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அருகே உள்ள திருக்கானூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா நெல் பருவத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பொன்னி, பொன்மணி உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தபோது, புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக அனைத்து நெற்பயிர்களும் நிலத்தில் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. தொடர்ந்த மழை பெய்து கொண்டிருந்ததால் நிலத்தில் விழுந்த நெல் மணிகள் அனைத்தும் வயலிலேயே முளைக்க துவங்கிவிட்டன.

இந்நிலையில், கொடாத்துாரில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மாவட்ட பூர்வா ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையிலான குழுவினர் பார்வையிட வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருந்தனர். 3மணி நேரமாக கத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வராதது குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட விவசாய கேள்வி எழுப்பியபோது,

நேரமின்மை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இதனால் விவசாயிகள் கோபமடைந்து, அங்கு இருந்த வேளாண் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் விவசாயிகளை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0