குமரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.!

23 January 2021, 3:28 pm
Quick Share

கன்னியாகுமரி: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சைக்கிள் பேரணி. தேர்தலில் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் உட்பட 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கட்டங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற பேரணியில்,

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தல், தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம், வாக்களிப்பது ஜனநாயக உரிமை என்பது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு அரசு அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். சைக்கிள் பேரணி நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று வேப்பமூடு ஜங்சன் பகுதியில் நிறைவு பெற்றது.

Views: - 7

0

0