மழை வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

11 September 2020, 9:13 pm
Quick Share

திருவாரூர்: பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மன்னார்குடி தீயணைப்பு துறை சார்பில் பாமணி ஆற்றங்கரையில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை வெள்ள பேரிடர் காலங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் இன்று மாலை நடைபெற்றது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருவாரூர் மாவட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் கமாண்டோ படை வீரர்கள் பங்கேற்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்டு இருப்பவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

கயிறு கட்டி அதன் மூலம் நீரில் தத்தளித்த அவர்களை மீட்பது படகின் உதவியுடன் நிற்பது காய்ந்த பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு மிதவை தயாரித்து நீரில் சிக்கி இருப்பவர்களை காப்பாற்றுவது போன்ற பல்வேறு செயல் விளக்கங்களை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

Views: - 0

0

0